பிரான்ஸில் ஒரே நாளில் 52,010 பேருக்கு கொரோனா- உலக நாடுகளில் அதிக ஒருநாள் பாதிப்பு!

பிரான்ஸில் ஒரே நாளில் 52,010 பேருக்கு கொரோனா- உலக நாடுகளில் அதிக ஒருநாள் பாதிப்பு!


பிரான்ஸில் ஒரே நாளில் 52,010 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. உலக நாடுகளிலேயே பிரான்ஸில்தான் ஒருநாள் கொரோனா தொற்று அதிகம்.

கொரோனா பாதிப்பானது அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை கடுமையாக உலுக்கியது. இதனால் இந்த நாடுகள் கொரோனா பாதிப்பு பட்டியலில் முதல் 10 இடங்களில் இருந்தன.


$ads={2}

பின்னர் படிப்படியாக கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் பிரேசில், இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் உச்சத்தை தொட்டது. இப்போது இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கிவிட்டது.

ஆனால் ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகிறது. பிரான்ஸில் ஒருநாளில் 52,010 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இத்தாலியில் 21,273 பேருக்கும் இங்கிலாந்தில் 19,790 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை 45,157 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அமெரிக்காவில் 34,932 பேருக்கும் ரஷ்யாவில் 16,710 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post