தனது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரி பாதாள பொடி லெஸி ரிட் மனுத்தாக்கல்!

தனது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரி பாதாள பொடி லெஸி ரிட் மனுத்தாக்கல்!


தனது பாதுகாப்பை  உறுதி செய்யுமாறுகோரி, பொடி லெஸி என பரவலாக அறியப்படும் பாதாள உலகத் தலைவராக பொலிஸாரால் அடையாளப்படுத்தப்படும்  ஜனித் மதுசங்க ரிட் மனு ஒன்றை  தாக்கல் செய்துள்ளார்.


இந்த ரிட் மனுவை இன்று (23) ஆராய்ந்த  மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் சோபித்த ராஜகருணா அடங்கிய குழுவினர், எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக பதில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகள் 07 பேருக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.


$ads={2}


தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் பதில் பொலிஸ் மா அதிபருக்கும் உத்தரவிடுமாறு ஜனித் மதுசங்க எனும் பொடி லெஸி தாக்கல் செய்துள்ள அந்த ரிட் மனு ஊடாக கோரியுள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.