1987 ஆம் ஆண்டு இடம்பெற்ற பிக்குகள் படுகொலை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க உத்தரவு!

1987 ஆம் ஆண்டு இடம்பெற்ற பிக்குகள் படுகொலை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க உத்தரவு!


அரந்தலாவை பகுதியில் பெளத்த பிக்குகள்  தமிழீழ விடுதலை புலிகளால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றவியல் விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு சட்ட மா அதிபர்  தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு உத்தரவிட்டுள்ளார்.  


1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்ற இந்தப் படுகொலை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை நடத்துமாறு சட்ட மா அதிபர் இதன்போது பணித்ததாக சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன  கேசரியிடம் தெரிவித்தார்.


$ads={2}


இதன் முதல் கட்டமாக குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டு தற்போது உயிருடன் உள்ள பெளத்த பிக்குவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறும்  அதனை மையப்படுத்தி அடிப்படை விசாரணைகளை ஆரம்பித்து முதல் விசாரணை அறிக்கையை இரு வாரங்களுக்குள் தனக்கு கையளிக்குமாரும் சட்ட மா அதிபர் பதில் பொலிஸ் மா அதிகருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post