பிரபல காட்பந்து வீரர் ரொனால்டோவுக்கு கொரோனா உறுதி!

பிரபல காட்பந்து வீரர் ரொனால்டோவுக்கு கொரோனா உறுதி!


பிரபல காட்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ கொரோனா வைரஸுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக போர்த்துகீசிய கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 


எனினும் ரொனால்டோ ஆரோக்கியமாகவும் எந்த அறிகுறிகளும் இன்றி இருப்பதாக அக் கூட்டமைப்பு தெரிவித்தது.


மேலும், ரொனால்டோ தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக போர்த்துகல் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியது.


$ads={2}


ரொனால்டோவின் பரிசோதனையை தொடர்ந்து, போர்ச்சுகல் அணியில் மீதமுள்ள வீரர்கள் இன்று PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர், எனினும் எவருக்கும் தொற்றுக்கு அடையாளம் காட்டப்படவில்லை என தெரிவித்துள்ளது.


இந்நிலையில், போர்ச்சுகலில் நாளை (14) நடைபெறும் ஸ்வீடன் அணிக்கு எதிரான யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் (UEFA Nations League) போட்டியில் ரொனால்டோ இடம்பெறமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post