ரிஷாத் பதியுதீன் எவ்வாறு பிடிபட்டார்???

ரிஷாத் பதியுதீன் எவ்வாறு பிடிபட்டார்???


கடந்த 6 நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கைதுசெய்யப்பட்ட சம்பவம் குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிறிதொரு நபரின் பெயரில் பதிவாகியுள்ள சிம் அட்டை மற்றும் புது கையடக்கத் தொலைபேசி என அவர் பயன்படுத்தியிருப்பது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


$ads={2}

இதுதவிர, கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை களுபோவில வைத்தியசாலை அருகே அவர் தங்கியிருந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், ரிஷாத் பதியுதீனுக்கு அடைக்கலம் கொடுத்த மருத்துவர் உள்ளிட்ட 7 பேர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post