கண்டி - கலஹா லெவலன் தோட்டத்திலும் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குறித்த பெண் மினுவங்கொடை ஆடை தொழிற்சாலையில் பணி புரிந்த நிலையில் அண்மையில் பொது போக்குவரத்தில் வீடு திரும்பியுள்ளார்.
கண்டியில் வைத்து கடைகளில் சில பொருட்களைக் கொள்வனவு செய்திருக்கும் அவர், நகரிலிருந்து முச்சக்கர வண்டி ஊடாக தோட்டத்திலுள்ள தனது வீட்டிற்கு சென்றிருக்கின்றார்.
இந்நிலையில், அவருக்கு கண்டி வைத்தியசாலையில் வைத்து PCR பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் பயணம் செய்த முச்சக்கர வண்டி சாரதி தனிமைப்படுத்தப்பட்டதுடன், பொருட்கள் வாங்கிய கடைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.