சர்ச்சைக்குரிய சுனாமி மகன்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சர்ச்சைக்குரிய சுனாமி மகன்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!


சுனாமியில் காணாமல் போன மகன் 16 வருடங்களுக்குப் பின்னர் வீடு திரும்பிய விடயத்தில் ஏற்பட்டுள்ள சர்ச்சை காரணமாக நீதிமன்றத்தின் உத்தரவின் படி மரபணுப் பரிசோதனை செய்வதற்காக குறித்த சிறுவனின் பெற்றோர் எனக் கூறப்படுபவர்கள் நீதிமன்றத்தில் நேற்று (07) ஆஜராகியுள்ளனர்.


கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிப் பேரழிவில் காணாமல் போய் 16 வருடங்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட மகன் தொடர்பில் இரு தாய்களுக்கிடையில் எழுந்த பிரச்சினைக்காக கடந்த ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் வளர்ப்புத்தாயாக அடையாளப்படுத்தப்பட்ட நூறுல் இன்ஷான் என்பவர் முறைப்பாடொன்றினை பதிவு செய்திருந்தார்.


அம்முறைப்பாட்டுக்கு அமைய நேற்று சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம். றிஸ்வி முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு இரண்டாவது தடவையாக எடுத்துக் கொள்ளப்பட்டது.


இதன்போது, சிறுவனின் வளர்ப்புத்தாய் என அடையாளப்படுத்தப்படும் அம்பாறை பிரதேசத்தை சேர்ந்த நூறுல் இன்ஷான் மற்றும் சுனாமியில் மகனை பறிகொடுத்ததாகத் தெரிவித்த மாளிகைக்காடு பிரதேசத்தை சேர்ந்த அபுசாலி சித்தி கமாலியா ஆகியோருடன் அவர்களை விட்டு பல வருடங்களுக்கு முன்னர் பிரிந்து சென்ற அவர்களின் கணவன்மார்களும் ஆஜராகி இருந்தனர்.


உண்மையான பெற்றோர் யார் என்பதை அறியும் மரபணுசோதனை செய்ய தேவையான செலவை ஒரு மாதகால இடைவெளியில் திரட்டுமாறு நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.


அப்பணத்தை கூலித்தொழிலாளியாக உள்ள என்னால் திரட்ட முடியாது என சியானின் தந்தை எச்.எம்.எம். அமீர் தெரிவிக்க, நவம்பர் 24ஆம் திகதி வரை இரு தரப்பினருக்கும் பணம் திரட்ட காலவசாகம் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது.


வளர்ப்பு பெற்றோர் என அடையாளப் படுத்தப்பட்டவர்களுக்கான போக்குவரத்து செலவை மாளிகைக்காட்டு கமாலியாவின் கணவர் (தந்தை) ஏ.ரஸீன் பொறுப்பேற்பதாக தெரிவித்துள்ளார்.


வழக்கு விசாரணை முடிந்த பின்னர் சியானின் தந்தை எச்.எம்.எம். அமீர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், DNA பரிசோதனை செய்ய சுமார் 30 ஆயிரம் ரூபா செலவாகும் என்கிறார்கள். அந்தளவிற்கு என்னால் பணத்தை திரட்ட முடியாது என்று கூறியுள்ளார்.






Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.