ந‌பிய‌வ‌ர்க‌ள் உண்ட‌ மாட்டிறைச்சியை எம்மால் சாப்பிட‌ முடியாமல் போய்விட்ட‌தே என்று கவலைப்படுவோம் என்று தான் ந‌பிய‌வ‌ர்க‌ள் மாட்டிறைச்சி சாப்பிட‌வில்லை. - முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

ந‌பிய‌வ‌ர்க‌ள் உண்ட‌ மாட்டிறைச்சியை எம்மால் சாப்பிட‌ முடியாமல் போய்விட்ட‌தே என்று கவலைப்படுவோம் என்று தான் ந‌பிய‌வ‌ர்க‌ள் மாட்டிறைச்சி சாப்பிட‌வில்லை. - முபாற‌க் அப்துல் ம‌ஜீத்


இந்தியா, இல‌ங்கை போன்ற‌ நாடுக‌ளில் மாடு அறுப்புக்கு த‌டை வ‌ரும் என்ப‌தை 1,400 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பே முஹ‌ம்ம‌து ந‌பிய‌வ‌ர்க‌ள் சைக்கிணை மூல‌ம் காட்டியுள்ளார்க‌ள் என தனது முகநூல் பக்கத்தில் உலமா கட்சியின் தலைவர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


இறைவ‌னும் ந‌பி முஹ‌ம்ம‌தும் மாடு சாப்பிடுவ‌தை அனும‌தித்துள்ள‌ன‌ர். அனும‌தி இருந்தும் ந‌பிய‌வ‌ர்க‌ள் மாட்டிறைச்சி சாப்பிட‌வில்லை.


1,400 வ‌ருட‌ங்க‌ளுக்கு பின் இப்போது இந்தியா, இல‌ங்கையில் மாட்டிறைச்சிக்கான‌ த‌டை வ‌ரும் போது ந‌பிய‌வ‌ர்க‌ள் அதனை விரும்பி உண்டிருந்தால் ந‌பிய‌வ‌ர்க‌ள் உண்ட‌ மாட்டிறைச்சியை எம்மால் சாப்பிட‌ முடியாமல் போய்விட்ட‌தே இந்த‌ நாடுக‌ளின் முஸ்லிம்க‌ள் க‌வ‌லையும், கைசேத‌மும் அடைவார்க‌ள் என்ப‌தால் தான் மாட்டிறைச்சியை விரும்பாத‌வ‌ர்க‌ளாக‌ இறைவ‌ன் முஹ‌ம்ம‌து ந‌பியை ஆக்கினான். இத‌ன் மூல‌ம் மாடறுப்பு த‌டை வ‌ந்தாலும் ந‌பி அவர்கள் விரும்பாத‌ ஒன்று என‌ இந்த‌ நாட்டு முஸ்லிம்க‌ள் த‌ம் ம‌ன‌தை தேற்றிக் கொள்கின்ற‌ன‌ர்.


மாட்டிறைச்சியை முஹ‌ம்ம‌து ந‌பி ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு அனும‌தித்து இல‌ங்கை, இந்திய‌ முஸ்லிம்க‌ளுக்காக‌ தாமும் சாப்பிடாம‌ல் இருந்த‌த‌ன் கால‌ம் இஸ்லாம் நிச்ச‌ய‌ம் க‌ட‌வுளின் ம‌த‌ம் என்ப‌து நூறு வீத‌ம் உறுதியாகிற‌து என்றார்.


$ads={2}


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post