இலங்கையில் கொரோனா கட்டுப்படுத்தப்படும் மட்டத்திலேயே உள்ளது; நாட்டை முடக்க அவசியமில்லை! -ஜனாதிபதி

இலங்கையில் கொரோனா கட்டுப்படுத்தப்படும் மட்டத்திலேயே உள்ளது; நாட்டை முடக்க அவசியமில்லை! -ஜனாதிபதி


கொரோனா வைரஸ் பரவல் ஓரளவுக்கு பாரதூரமாக இருந்த போதிலும் அது கட்டுப்படுத்தப்படும் மட்டத்திலேயே இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.


கொரோனா பரவல் காரணமாக நாட்டை முடக்குவது அதற்கு தீர்வாக அமையாது எனவும் அவர் கூறியுள்ளார்.


அதேவேளை தற்போது ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் 5,000 ரூபாய் கொடுப்பனவை வழங்கவும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.


$ads={2}


இதனிடையே அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கை விஜயம் தொடர்பாகவும் அமைச்சரவையில் பேசப்பட்டுள்ளது.


அமெரிக்க இராஜாங்க செயலாளர் இலங்கை அரசின் அழைப்பின் பேரில் விஜயம் செய்யவில்லை எனவும், அந்த விஜயத்திற்கான செலவை அமெரிக்காவே பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post