பொதுமக்கள் தேவைக்கு அதிகமான பொருட்களை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்! -பந்துல

பொதுமக்கள் தேவைக்கு அதிகமான பொருட்களை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்! -பந்துல


பொது மக்கள் தேவைக்கு அதிகமாகப் பொருட்களைக் கொள்வனவு செய்வதை முதல் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தவும், அரச சேவையினை சீராக முன்னெடுக்கவும் அரசாங்கம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துகிறது. இந்நிலையில், அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒரு சில பிரதேசங்களில் மக்கள் பொறுப்பட்ட விதமாகச் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது.


$ads={2}


மீண்டும் நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப் படும் என்ற தவறான வதந்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பொது மக்கள் தேவைக்கு அதிகமாகப் பொருட்களை கொள்வனவு செய்கிறார்கள். இவ்வாறான செயற்பாடுகளை முதலில் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.


வசதி படைத்தோர் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது சாதாரண மக்களைக் கருத்திற்கொள்ள வேண்டும்.


அத்தியாவசிய பொருட்களைத் தேவைக்கு மேலதிகமாக கொள்வனவு செய்ய வேண்டிய அவசியம் ஏதும் கிடையாது. அத்தியாவசிய பொருட்கள் தேவையான அளவு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது என பந்துல குணவர்தன தெரிவித்தார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post