முன்னாள் ஜனாதிபதி ஐந்து மணிநேர விசாரணையின் பின் வெளியேற்றம்!

முன்னாள் ஜனாதிபதி ஐந்து மணிநேர விசாரணையின் பின் வெளியேற்றம்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இரண்டாவது தடவையாக இன்று (12) ஆஜரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் அங்கிருந்து வௌியாகி உள்ளார்.


அவரிடம் சுமார் 5 மணி நேர விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


$ads={2}


மீண்டும் அவரை ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது


இதற்கு முன்னர் அவர் கடந்த 5ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post