புலமைப்பரிசில் பரீட்சை மாணவிக்கு அனுமதி மறுப்பு; விசாரணைகள் ஆரம்பம்!

புலமைப்பரிசில் பரீட்சை மாணவிக்கு அனுமதி மறுப்பு; விசாரணைகள் ஆரம்பம்!

நிக்கவெரட்டிய கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 5 இல் கல்வி பயிலும் மாணவியை புலமைபரிசில் பரீட்சைக்கு தோற்ற அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் இலவச கல்வியினை வழங்கும் நாட்டுக்கு முரணானது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.


பொதுஜன பெரமுனவின் காரியாலத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


நிக்கவெரட்டிய கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் ஐந்தாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவிக்கு நேற்று நடைப்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்ற குறித்த பாடசாலை அதிபரினால் அனுமதி வழங்கப்படவில்லை.


$ads={2}


இச்சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு உரிய தரப்பினருக்கு   பணிப்புரை விடுத்துள்ளேன். எக்காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அந்த மாணவி  பரீட்சைக்கு தோற்ற அனுமதி வழங்க மறுத்துள்ளார் என்பது முதலில் அறியப்பட வேண்டும்.


விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு பாரபட்சமின்றிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post