ரிஷாட் பதியுதீனின் மனைவியிடம் பெறப்பட்ட வாக்குமூலம்!

ரிஷாட் பதியுதீனின் மனைவியிடம் பெறப்பட்ட வாக்குமூலம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியிடம் குற்றப்புலனாய்வுத்துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

நேற்று (15) மாலை கொழும்பில் உள்ள ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வைத்து இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. சுமார் ஒரு மணித்தியாலமாக இந்த வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிஷாட் பதியுதீனை கைது செய்ய 6 காவல்துறை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது.

$ads={2}

2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது புத்தளத்தில் இருந்து மன்னார் சிலாவத்துறைக்கு 222 அரச பேரூந்துகளில் வாக்காளர்களை அழைத்துச்சென்றதன் மூலம் பொதுச் சொத்தை துஸ்பிரயோகம் செய்தார் என்பதே ரிஷாட் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும்.

இந்நிலையில், தம்மை கைது செய்வதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி ரிஷாட் பதியுதீன் சார்பில் அவரின் சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post