ரிஷாட் பதியுதீனை கைது செய்தால் எமது எதிர்ப்பு நடவடிக்கைகள் பலமாக இருக்கும்! -சஜித்

ரிஷாட் பதியுதீனை கைது செய்தால் எமது எதிர்ப்பு நடவடிக்கைகள் பலமாக இருக்கும்! -சஜித்


அரசுடன் இணையவில்லை என்ற காரணத்துக்காகவும், அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிரான தீர்ப்பால் ஏற்பட்டுள்ள அவமானத்தை மூடி மறைப்பதற்காகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கைது செய்ய முயற்சிக்கப்படுகின்றது. இந்தக் கைது நடவடிக்கையை அரசு உடன் நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது,

"ரிஷாட் பதியுதீனை கைது செய்யும் முயற்சி அரசின் திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கை என நாட்டிலுள்ள அனைவருக்கும் தெளிவாகத் தெரிகின்றது.

$ads={2}

ரிஷாட் கைது செய்யப்பட்டால் அதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதற்கு எதிராக நாம் போராடுவோம். நாடாளுமன்றத்தில் எமது எதிர்ப்பு நடவடிக்கைகள் பலமாக இருக்கும்.

இதேவேளை, நாட்டின் நீதித்துறை சுயாதீனத்தன்மையுடன் செயற்பட வேண்டும். பழிவாங்கல் நடவடிக்கைக்கு நீதித்துறை துணைபோகாது என்று நாம் நினைக்கின்றோம்." என்றார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post