கொரொனாவுக்கு எதிராக சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ள முன்னால் அமைச்சர்!!

கொரொனாவுக்கு எதிராக சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ள முன்னால் அமைச்சர்!!

நாட்டு மக்களும் கொரோனா தொற்றிலிருந்து சுகம்பெற வேண்டும் என தெரிவித்து முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா சத்தியாக்கிரக போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார்.

அண்மையில் அவர் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

$ads={2}

களனி – தலுகம – புலுகஹசந்தி பிரதேசத்திலுள்ள உத்பலவர்ண ஸ்ரீ ரங்கநாத விஷ்ணு கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்ட அவர் அதனைத் தொடர்ந்து அந்த ஆலயத்திற்கு முன்பாக அமர்ந்திருந்தவாறு போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

தனக்கு வாக்களித்த களனி பிரதேச மக்கள் உட்பட ஒட்டுமொத்த கம்பஹா மாவட்டத்திலுள்ளவர்களும் அதேபோல நாட்டு மக்களும் கொரோனா தொற்றிலிருந்து சுகம்பெற வேண்டும் என்பதே தனது இந்த போராட்டத்திற்கான நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post