கொரோனா பீதியால் வெறிச்சோடிக்கிடக்கும் கொழும்பு!!!

கொரோனா பீதியால் வெறிச்சோடிக்கிடக்கும் கொழும்பு!!!

File Pic

கொரோனா வைரஸ் இன்னமும் சமூகத்திற்குள் பரவவில்லை என சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சமூகத்திற்குள் கொரோனா தொற்று பரவியுள்ளதாக மக்கள் மத்தியில் சந்தேகம் ஒன்று ஏற்பட்டுள்ள போதிலும் இதுவரையில் அவ்வாறான ஒன்று ஏற்படவில்லை என சுகாதார பிரிவு கூறியுள்ளது.


$ads={2}

எப்படியிருப்பினும் இந்த வாரம் மிகவும் தீர்மானமிக்கதென இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் நிலைமைக்கு மத்தியில் மக்களுக்கு அச்ச நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதனை நேற்று அவதானிக்க முடிந்தமை விசேட விடயமாகும் என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் வீட்டை விட்டு வெளியேறும் நடவடிக்கையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் கொழும்பு நகரங்கள் பாழடைந்த நிலையில் காண முடிந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post