ஏன் முழு இலங்கையும் லொக்டவுன் செய்யப்படவில்லை ?? - காரணம் இது தான் : இராணுவ தளபதி

ஏன் முழு இலங்கையும் லொக்டவுன் செய்யப்படவில்லை ?? - காரணம் இது தான் : இராணுவ தளபதி


நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள போதும், முழு நாட்டையும் லொக்டவுன் செய்யவில்லை என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

லொக்டவுன் என்பது மிகவும் இலகுவான விடயம் என்றாலும் மக்கள் வாழ்வாதார போராட்டத்தை மேற்கொள்ளவதற்கு அது மிகவும் சிக்கலான விடயம் என குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு இன்று காலை கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


$ads={2}

கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டவுடன் நாட்டை லொக்டவுன் செய்யாமல் அருகில் செயற்பட்டவர்களை கண்டுபிடித்து அதனை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடடிக்கை மேற்கொள்வதே அவசியம் என அவர் கூறியுள்ளார்.

முதலாவது நோயாளியான பெண் அடையாளம் காணப்பட்டவுடன் 3 பிரதேசங்களில் மாத்திரம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. குறித்த தொழிற்சாலையில் பணியாற்றிய பெருமளவு ஊழியர்கள் அந்த பகுதியில் இருந்து வருகைத்தருவதே அதற்கு காரணமாகும்.

ஜனாதிபதியுடன் பல விடயங்கள் கலந்துரையாடி நாட்டை முன்னெடுத்து செல்வதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post