ஆப்கான் கிரிக்கட் வீரர் சாலை விபத்தில் பலி!!

ஆப்கான் கிரிக்கட் வீரர் சாலை விபத்தில் பலி!!


ஆப்கானிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் நஜீப் தரகாய். ஆப்கானிஸ்தான் அணிக்காக 12 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், கடந்த வெள்ளிக்கிழமை ஜலதாபாத் நகரில் உள்ள கடையில் பொருட்கள் வாங்க சாலையைக் கடந்த போது கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.


தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி நஜீப் தரகாய் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதிரடியாக ஆடக்கூடிய நஜீப் தரகாய் உயிரிழப்பு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரும் இழப்பு எனவும் இரங்கல் செய்தியை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.