மேல் மாகாணத்தில் தங்கியிருக்கும் வெளிமாவட்டவர்களுக்கான அறிவித்தல்!

மேல் மாகாணத்தில் தங்கியிருக்கும் வெளிமாவட்டவர்களுக்கான அறிவித்தல்!


மேல் மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் தங்கி இருக்கின்ற வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், அங்கிருந்து வெளியேற வேண்டாம் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.


மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு நாளை (29) நள்ளிரவு முதல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது. மேலும் இது திங்கள் அன்று அகற்றப்படும்.


$ads={2}


இந்நிலையில், மேல்மாகாணத்தில் இருக்கும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இங்கிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்வதால், அந்த மாவட்டங்களிலும் கொரோனா பரவும் அபாயம் அதிகம் உள்ளது.


எனவே யாரும் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்ல வேண்டாம் என்று இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post