சமூக மட்டத்தில் கொரோனா - தேசிய வைத்தியசாலை தாதிக்கு கொரோனா!

சமூக மட்டத்தில் கொரோனா - தேசிய வைத்தியசாலை தாதிக்கு கொரோனா!


கொழும்பு தேசிய மருத்துவமனையில் பணியாற்றும் தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் தாதியாக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

மத்துகமைவில் வசிக்கும் இப்பெண் களுத்துறை நாகொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆதாரம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

பாதிக்கப்பட்ட தாதியிடன் தொடர்பு கொண்டிருந்த மருத்துவமனை ஊழியர்களின் குழுவின் பி.சி.ஆர் சோதனைகளின் முடிவுகள்இன்று கிடைக்கப்பெறவுள்ளன.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post