மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் மறு அறிவித்தல் வரை பூட்டு!

மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் மறு அறிவித்தல் வரை பூட்டு!


மோட்டார் வாகன திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் மறுஅறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் சுமித் சீ.கே. அலஹகோன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகமும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


$ads={2}


நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்ச நிலைமையைக் கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


அத்துடன், கொரோனா தொற்று அச்ச நிலைமை வழமைக்குத் திரும்பிய பின்னர் மீண்டும் சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், இதனால் ஏற்படும் அசௌகரியங்களை பொறுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post