கொரோனா அறிகுறிகளுடன் இருக்கும் பணியாளரை பணியில் அமர்த்த முடியாது; நிறுவனங்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை!

கொரோனா அறிகுறிகளுடன் இருக்கும் பணியாளரை பணியில் அமர்த்த முடியாது; நிறுவனங்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை!


கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்ட பின்னர் பணியாளர் ஒருவரை பணிகளில் ஈடுபடுமாறு அழுத்தம் கொடுக்க முடியாது என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.


சுற்றாடல் நிபுணரும், சமூக வைத்திய ஆலோசகருமான வைத்திய கலாநிதி இனோகா சுரவீர இந்த வலியுறுத்தலை தொழில் வழங்குனர்களுக்கு விடுத்துள்ளார்.


பணியாளர் ஒருவருக்கு இருமல், தடிமன் உட்பட்ட அறிகுறிகள் இருக்குமாயின் அவர் ஒரு வாரத்துக்கு வீட்டில் தங்கியிருந்த மருத்துவம் செய்துகொள்ளப்பட வேண்டும்.


$ads={2}


இந்நிலையில், அவர் பணியாற்றும் நிறுவனமும் அவரை கண்காணித்து பொது மருத்துவ அதிகாரிக்கு அறிவிக்க வேண்டும்.


இதற்கான நிறுவனங்கள் யாவும் தமது நிறுவத்தின் கொரோனா மையம் ஒன்றை அமைக்குமாறு கோரப்பட்டுள்ளதாக சுற்றாடல் மற்றும் நிபுணரும் சமூக வைத்திய ஆலோசகருமான வைத்திய கலாநிதி இனோகா சுரவீர கேட்டுள்ளார்.


மேலும், அனைத்து தொழில் துறைகளுக்கும் சுகாதார வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன குறித்த வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post