பிரான்ஸ் நாட்டினர் தான் உண்மையான தீவிரவாதிகள்; கடந்த காலங்களில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்தவர்கள்! -முன்னாள் மலேசிய பிரதமர்

பிரான்ஸ் நாட்டினர் தான் உண்மையான தீவிரவாதிகள்; கடந்த காலங்களில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்தவர்கள்! -முன்னாள் மலேசிய பிரதமர்


மஹாதீர் முஹம்மத் அவர்கள் பிரான்ஸிற்கு எதிராக அனல் பறக்கும் விமர்ச்சனங்களை தொடர்ந்து  டுவிட்டரில் வைத்து வந்தார்.


நபிகள் நாயகத்தை அவமதிக்கும் கேலி சித்திரத்திற்கு எதிராக அனல் பறக்கும் வார்த்தைகளை பதிவிட்ட மலேசியாவின் முன்னாள் பிரதமர், பிரான்ஸ் தொடர்பாக பதிவிட்ட 12 ஆவது பதிவில் ஒரு வரலாற்றை சொல்லியிருந்தார்.


இஸ்லாத்தை தீவிரவாதம் என்றும் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்றும் விமர்ச்சிக்கும்  பிரான்ஸ் அதிபர் பிரான்ஸின் வரலாற்றை திரும்பி பார்க்கவேண்டும்.


$ads={2}


உண்மையில் பிரான்ஸ் நாட்டினர் தான் உண்மையான தீவிரவாதிகள் கடந்த காலங்களில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்தவர்கள்.


அதற்கு பழிவாங்கும் அனைத்து உரிமையும் முஸ்லிம்களுக்கு உண்டு என்று மஹாதீர் முஹம்மத் அவர்கள் தனது டுவிட்டர் பதில் கூறியிருந்தார்.


இந்த டுவீட்டை டுவிட்டர் நிர்வாகம் டுவிட்டரில் இருந்து நீக்கிவிட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post