முஸ்லிம்கள் அப்பாவிகள் மேற்குலகை ஆளக்கூடியவர்கள் தான் தீவிரவாதிகள்; அமெரிக்கா நினைப்பது போல் முஸ்லிம்கள் ஏமாளிகள் அல்ல!! -மைக்கேல் ஓன்பரே

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முஸ்லிம்கள் அப்பாவிகள் மேற்குலகை ஆளக்கூடியவர்கள் தான் தீவிரவாதிகள்; அமெரிக்கா நினைப்பது போல் முஸ்லிம்கள் ஏமாளிகள் அல்ல!! -மைக்கேல் ஓன்பரே


உண்மையாகவே முஸ்லிம்கள் அப்பாவிகள், மேற்குலகை ஆள்பவர்கள் தான் தீவிரவாதிகள் என பிரான்ஸ் நாட்டின் தத்துவ மேதையான மைக்கேல் ஓன்பரே (Michel Onfray) கருத்து வெளியிட்டுள்ளார்.


இஸ்லாத்தின் இறுதித் தூதராகவும், உலக மக்களுக்குறிய உன்னத வழிகாட்டியாகவும் அனுப்பப்பட்ட நபி (ஸல்) அவர்களை கேலிச் சித்திரமாக வரைந்து இழிவுபடுத்த முயன்றமையை காரணம் காட்டியே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.


குறித்த தாக்குதலைத் தொடர்ந்து பிரான்ஸ் முழுவதும் முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் எதிரான போராட்டங்கள் நடத்தப்பட்டன. 


$ads={2}


குறித்த போராட்டங்களுக்கு எதிராக இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாத தாக்குதல்களை ஒரு போதும் ஆதரிப்பதில்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக பாரிய ஆர்ப்பாட்டங்கள் முஸ்லிம்களினாலும் பிரான்ஸ் முழுவதும் நடத்தப்பட்டன.


குறித்த பத்திரிகை மீண்டும் மீண்டும் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தும் காரியத்தில் ஈடுபடுவதை கண்டிக்கும் விதமாகவே பிரான்சின் தத்துவ மேதை மேற்கண்ட கருத்தை வெளிப்படையாக அறிவித்துள்ளார்.


இது தொடர்பில் தத்துவ மேதை “மைக்கேல் ஓன்பரே” தொடர்ந்து கருத்து வெளியிடுகளையில் இவ்வாறு தெரிவிக்கின்றார்.


மேற்குலகும், அமெரிக்காவும் இஸ்லாமிய நாடுகளின் பிரச்சினைகளில் தேவையில்லாமல் தலையிட்டு ஒவ்வொரு நாளும் முஸ்லிம்களை கொன்று குவித்து வருகின்றன. 


முஸ்லிம்கள் பொறுக்கும் வரை பொறுத்து விட்டு தம்மை தற்காத்துக் கொள்வதற்காக தற்காப்புத் தாக்குதலில் இறங்கும் போது அவர்களுக்கு தீவிரவாதிகள் என்று மேற்குலகம் முத்திரை குத்துகின்றது.


உண்மையில் முஸ்லிம்கள் அப்பாவிகள் மேற்குலகை ஆளக்கூடியவர்கள் தான் தீவிரவாதிகள். மேற்குலகும் அமெரிக்காவும் நினைப்பது போல் முஸ்லிம்கள் ஏமாளிகள் அல்ல. 


இஸ்லாமிய நாடுகளில் நாம் அரங்கேற்றுகின்ற குழப்பங்கள் கொலையை விடவும் கொடியதாக உள்ளது. அதனை அவர்கள் பொறுக்க முடியாத நிலை தோன்றும் போது, சில தாக்குதல்களை தொடுக்கின்றார்கள். 


சார்லி ஹெப்டோ என்ற பத்திரிக்கையை கட்டுப்படுத்த முடியாத நமக்கு முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று சொல்ல என்ன தகுதியிருக்கின்றது?


முஸ்லிம்களையும் அவர்களின் உயிருக்கும் மேலான நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் கேலிச் சித்திரமாக சார்லி ஹெப்டோ வரைந்ததனால் தான் இந்த பிரச்சினைகள் தோன்றியிருக்கின்றது.


கண்டிக்கப்பட வேண்டியது சார்லி ஹெப்டோ பத்திரிக்கையே தவிர முஸ்லிம்கள் அல்ல.


முஸ்லிம்கள் செய்திருப்பது எதிர்வினையே என மைக்கேல் ஓன்பரே சுட்டிக்காட்டுகின்றார். 


கண்மூடித் தனமாக இஸ்லாத்தை விமர்சனம் செய்து, கருத்து வெளியிடும் பத்திரிக்கையாளர்கள், விமர்சகர்களுக்கு அப்பால் நடுநிலைக் கண்ணோட்டத்துடன் தத்துவ மேதை மைக்கேல் ஓன்பரே குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பாராட்டத் தக்கவையாகும்.


- ஜப்னா முஸ்லீம்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.