கொரோனா பரவல் தொடர்பான உண்மையான தரவுகளை அரசு வெளியிட வேண்டும்! -சஜித்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா பரவல் தொடர்பான உண்மையான தரவுகளை அரசு வெளியிட வேண்டும்! -சஜித்


கொரோனா வைரஸ் தொடர்பான உண்மையான தரவுகளை அரசு வெளிப்படுத்தவேண்டும். தரவுகளை மறைப்பதால் பாரிய அனர்த்தம் ஏற்படும் அபாயம் இருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


நாடாளுமன்றத்தில் நேற்று (23) கொரோனா சுகாதார நெருக்கடி தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,


"கொரோனா தொற்று கொத்தணியாக நாட்டில் பல பிரதேசங்களில் இருந்து பரவி வருகின்றது. இவ்வாறான கொத்தணிகள் சமூக மட்டத்துக்குப் பரவும் அபாயம் இருக்கின்றது என அரச வைத்தியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஆனால், அரசு அதை மறைத்து வருகின்றது.


கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய சில ஆலோசனைகளை கடந்த ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் தெரிவித்து வந்தோம். ஆனால், அரசு அதனை நகைச்சுவைக்கு எடுத்துக்கொண்டு அரசியல் ரீதியில் விமர்சித்து வந்தனர்.


நாங்கள் அன்று தெரிவித்த விடயங்களை விமர்சித்த அரச தரப்பினர் தற்போது அதனை உணர்ந்து செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். இவர்களின் காலதாமதத்தால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருக்கின்றது.


அரச தரப்பினர் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதை விட அரசியல் நடவடிக்கைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்தனர்.


$ads={2}


நாட்டில் மூன்றாவது அலையாக மீண்டும் தலைதூக்கி இருக்கும் கொரோனாத் தொற்று கொத்தணியாக வியாபித்து பல கொத்தணிகள் உருவாகும் அபாயம் இருக்கின்றது.


கொத்தணிகளின் ஆரம்பத்தை அறிந்துகொள்ள முடியாமல் இருப்பதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.


கொரோனாத் தொற்றாளர்கள் மற்றும் சந்தேகத்துக்குரியவர்கள் அதிகரித்துச் செல்கின்றனர். இவர்களுக்கு PCR பரிசோதனை செய்து பெறுபேற்றைப் பெற்றுக்கொள்ள காலதாமதம் ஏற்படுகின்றது.


இதனால் தொற்றாளர்கள் மேலும் அதிகரிக்கும் நிலையே இருக்கின்றது. அதேபோன்று PCR மாதிரிகள் பரிசோதனைக்காகக் குவிந்திருக்கின்றன எனவும் தெரியவருகின்றது. அதேவேளை, PCR பரிசோதனை இன்று வியாபாரமாக மாறி வருகின்றது." என்றார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.