சுனாமியில் காணாமல் போன சிறுவனுக்கு இன்னுமோர் பெண்ணும் உரிமை கோரி முறைப்பாடு!

சுனாமியில் காணாமல் போன சிறுவனுக்கு இன்னுமோர் பெண்ணும் உரிமை கோரி முறைப்பாடு!


அம்பாறை பகுதியில் சுனாமியின் போது காணாமல் போனதாக கூறப்படும் சிறுவனின் உண்மையான தாய் தான் என மற்றுமொரு பெண்ணும் உரிமை கோரியுள்ளார்.

நூறுல் இன்ஷான் என்பவரே இவ்வாறு உரிமை கோரியுள்ளார். இந்நிலையில், குறித்த சிறுவன் தனது மகன் என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது தனது மகன் காணாமல் போனதாக அம்பாறையில் பெண் ஒருவர் கூறியிருந்தார்.

2004ம் ஆண்டு டிசம்பரில் அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாளிகைக்காடு பகுதியில் சுனாமி தாக்கியதை அடுத்து தனது ஐந்து வயது மகன் காணாமல் போனதாக அபுசாலி சித்தி ஹமாலியா என்ற பெண் கூறியிருந்தார்.

தனது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தனது மகன் காணாமல் போனதைத் தொடர்ந்து ஒருபோதும் அவரை தேடும் நடவடிக்கைகளை நிறுத்தவில்லை என்றும் பின்னர் அவரை உள்ளூர் வைத்தியசாலை ஒன்றில் இருப்பதை அறிந்துகொண்டதாகவும் கூறியுள்ளார்.

எனினும், வைத்தியசாலைக்கு சென்றபோது, ​​தனது மகனை ஒரு சிங்கள குடும்பத்தினர் அழைத்துச் சென்றிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

தனது மகனைக் கண்டுபிடிப்பதற்கான தனது போராட்டத்தைத் தொடர்ந்ததாகவும், பொலிஸார் மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தின் ஆதரவு மிகக் குறைவாகவே இருந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

இறுதியில் 2016ம் ஆண்டில், தனது மகன் ஒரு பாடசாலையில் இருப்பது தொடர்பில் தகவல் கிடைத்தது, இதனையடுத்து அவரது அடையாளத்தை உறுதிப்படுத்த அவரைப் பார்க்க முயற்சி செய்தேன்.

எனினும், அவரைச் சந்திக்க பாடசாலை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்று அவர் கூறினார். பின்னர் தனது மகனிடம் உண்மையை கூறியதாகவும் அபுசாலி சித்தி ஹமாலியா தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், சிங்களத்தை மட்டுமே பேசக்கூடிய சிறுவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அந்தப் பெண் தனது தாய் என்று தான் நம்புவதாகவும், 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணைவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post