நாட்டின் சில பகுதிகளில் தபால் சேவை இடைநிறுத்தம்!

நாட்டின் சில பகுதிகளில் தபால் சேவை இடைநிறுத்தம்!


கொரோனா தொற்று காரணமாக சில பிரதேசங்களில் தபால் மற்றும் துணை தபால் நிலையங்களின் சேவைகளை மீள் அறிவிப்பு வரை இடை நிறுத்துவதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.


நாட்டில் நிலவி வரும் தொற்றின் காரணமாக பல பிரதேசங்களிலும் மக்கள் தபால் மூலம் வரும் கடிதங்கள் மற்றும் பொதிகளைப் பெற்றுக்கொள்ள மறுப்பதனால் மற்றும் தபால் சேவைகளில் ஈடுபடுவோரின் பாதுகாப்பு கருதி இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


$ads={2}


அதன்படி, மேல் மாகாணம், காலி பிரதான தபால் நிலையம் மற்றும் அதன் உப நிலையங்கள், குருணாகல மாவட்டத்தின் குலியாபிட்டி மற்றும் அதனைச் சூழவுள்ள தபால் நிலையங்களே இவ்வாறு சேவைகளை நிறுத்தியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனினும் தபால் சேவைகளினூடாக வழங்கி வரும் மருத்துவ பொருட்களை தபால் நிலையங்கள் மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.