தலைவரின் அனுமதியுடனேயே 20க்கு வாக்களித்தோம்! ஹரீஸ் எம்.பி தெரிவிப்பு!

தலைவரின் அனுமதியுடனேயே 20க்கு வாக்களித்தோம்! ஹரீஸ் எம்.பி தெரிவிப்பு!


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ரவூப் ஹக்கீம் அனுமதியுடனேயே 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.


கொழும்பு ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்கவிருந்ததை ஹக்கீம் அறிந்திருந்தார்.


$ads={2}


அவர் அறிந்திருந்த நிலைமையிலேயே 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தோம் எனவும் ஹாரீஸ் கூறியுள்ளார்.


இதனிடையே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் சம்பந்தமாக கலந்துரையாட கட்சியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையில் விசேட பேச்சுவார்த்தை ஒன்றும் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post