இலங்கையில் கொரோனாவை கட்டுப்படுத்துவது சாத்தியமற்றது! -சிசிர ஜயகொடி

இலங்கையில் கொரோனாவை கட்டுப்படுத்துவது சாத்தியமற்றது! -சிசிர ஜயகொடி


முழு நாட்டையும் முடக்கி கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவது சாத்தியமற்றது. கொரோனா வைரஸ் தாக்கத்துடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.


மேலும், கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு மத்தியில் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் அன்றாட செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான செயற்திட்டம் இவ்வாரம் முதல் செயற்படுத்தப்படும்.


$ads={2}


கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு ஆயுர்வேத முறையில் சிகிச்சை வழங்குவது குறித்து ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு மத்தியில் மக்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்துவது குறித்து விசேட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என அவர் தொடர்ந்தும் சுட்டிக்காட்டியுள்ளார்


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post