வரி நீக்கம் தற்காலிகமானது; உள்நாட்டு அறுவடை சந்தைக்கு வருமுன் வரி நீக்கப்படும்!

வரி நீக்கம் தற்காலிகமானது; உள்நாட்டு அறுவடை சந்தைக்கு வருமுன் வரி நீக்கப்படும்!


அத்தியாவசிய பொருட்களின் வரி நீக்கம் தற்காலிகமானது என விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப விவசாய இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


டின் மீன், பருப்பு, சீனி, வெங்காயம் உள்ளிட்ட சில பொருட்களுக்கான இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளது.


அத்தியாவசிய பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து கொள்வதே அரசாங்கத்தின் நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


$ads={2}


உள்நாட்டு விவசாயிகளின் பெரிய வெங்காயம் உள்ளிட்ட அனைத்து அறுவடைகளும் சந்தைக்கு  வரும்முன்னர் இறக்குமதி வரி நீக்கம் இரத்து செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


கொரோனா அனர்த்தம் காரணமாக இவ்வாறு இறக்குமதி வரி நீக்கி மக்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post