கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் பதவியை மோர்கனுக்கு அளிக்க தினேஷ் கார்த்திக் முடிவு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் பதவியை மோர்கனுக்கு அளிக்க தினேஷ் கார்த்திக் முடிவு13வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. அவற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஒன்றாகும்.

இந்த அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் உள்ளார். ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்சுக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இன்றைய ஆட்டத்தில் விளையாட உள்ளது.

இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், கேப்டன் தினேஷ் தனது பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காகவும் மற்றும் அணிக்காக அதிக பங்காற்றவும் முடிவு செய்துள்ளார்.

அதனால் தனது கேப்டன் பதவியை மோர்கனிடம் ஒப்படைக்க விரும்புகிறார். இதனை அணி நிர்வாகத்திடம் அவர் தெரிவித்து இருக்கிறார் என தெரிவித்து உள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post