கண்டியில் இருவர் பரிதாப பலி!

கண்டியில் இருவர் பரிதாப பலி!

கண்டியில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றின் மின்தூக்கி (elevator) உடைந்து வீழ்ந்ததில் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த இருவர் இஸ்தலத்திலே உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று காலை (16) இடம்பெற்றுள்ளது.

கட்டிட திருத்த வேலைகளில் ஈடுபட்டிருந்த கொண்டிருந்த இரு மேசன் தொழிலாளர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

$ads={2}

இவர்களில் ஒருவர் கண்டி ஒகஸ்டாவத்தை என்ற இடத்தைச் சேர்ந்த ஏ.ஜி. அரவிந்த (54) என்றும் மற்றையவர் கட்டுகஸ்தோட்டை, உடுவாவெல பிரதேசத்தைச் சேர்ந்த உபாலி ஜெயரத்ன (57) எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post