பொத்துவில் பகுதியில் கொரோனா; முஸ்லீம் பள்ளிகளுக்கு பூட்டு!

பொத்துவில் பகுதியில் கொரோனா; முஸ்லீம் பள்ளிகளுக்கு பூட்டு!


பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்கள் வசித்துவரும் கிராம சேவகர் பிரிவுகள் நேற்று (24) மாலை முதல் மறுஅறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது.


பொதுமக்களின் நலன்கருதி, மீன் மற்றும் மரக்கறி சந்தை ஆகியன பொத்துவில் பிரேதேச ஜலால்தீன் சதுக்கத்தில் அமைந்துள்ள பொது மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 


மேலும் ஐவேளை தொழுகை மற்றும்  ஜும்மா தொழுகைகளை பள்ளிவாயல்களில் நிறைவேற்றுவதும் இன்று (25) அஸர் தொழுகை முதல் மறுஅறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளது.


கொரோனா தொற்றாளர்களது உறவினர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். மேலும் அவர்களுடன் உறவைப் பேணி வந்த 18 நபர்களிடம் இருந்து PCR பரிசோதனைக்கான மாதிரிகள் பொத்துவில் சுகாதார வைத்தியர் Dr. AU சமத் தலைமையிலானா குழுவினரால் எடுக்கப்பட்டுள்ளது. 


$ads={2}


இன்றும் (25) சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களிடம் இருந்து PCR பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்கப்பட உள்ளதாக பொத்துவில் சுகாதார வைத்தியப் பணிமனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.


குறித்த கொரோனா தொற்றாளர்களுடன் அல்லது அவர்களது உறவினர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் இருப்பின், தமது கிராம சேவகரிடம் அல்லது பொத்துவில் பொலீஸ் நிலயத்தில் அல்லது பொதுச் சுகாதார பரிசோதகர்களிடதில்  தெரிவிக்குமாறு வேண்டப் படுகின்றனர்.


-இர்ஷாத் ஜமால்


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post