மின்சாரக் கட்டணம் தொடர்பாக தனிமைப்படுத்தல் பகுதிகளுக்கு விசேடஅறிவிப்பு!

மின்சாரக் கட்டணம் தொடர்பாக தனிமைப்படுத்தல் பகுதிகளுக்கு விசேடஅறிவிப்பு!


மாதாந்திர மின்கட்டணம் செலுத்தப்படாததன் அடிப்படையில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது என அரசாங்கம் முடிவு செய்துள்ளது.


இந்த விவகாரம் தொடர்பாக மின்வாரிய அமைச்சர் டலஸ் அலகப்பெரும சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.


நாட்டின் 64 பொலிஸ் பிரிவுகளில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.


$ads={2}


கம்பஹா மாவட்டத்தில் 37, கொழும்பு நகரத்தில் 15, குலியபிட்டி பகுதியில் 05, கொழும்பின் புறநகர் பகுதிகளில் 04 (வெலிகட, வெல்லம்பிட்டி, கொதட்டுவ மற்றும் முல்லேரியாவ), களுத்துறை மாவட்டத்தில் 03 பொலிஸ் பகுதிகள் (பேருவளை, அழுத்கம மற்றும் பயகல) போன்ற பகுதிகளிலே இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post