
கொரோனா தொற்றின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு தனியார்துறை பணியாளர்களுக்கு ஆகக்கூடிய சம்பளத்தை வழங்கும் முறையை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு Zoom தொழிநுட்பத்தின் மூலம் அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (27) இடம்பெற்றிருந்தது.
$ads={2}
இதன்போது அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரன இது தொடர்பாக தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போது கொரோனா தொற்றின் காரணமாக ஏற்ப்பட்டுள்ள நிலைமை தொடர்பாக நேற்று நடைப்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதனை தொடர்ந்து தனியார்துறை ஊழியர்கள் சம்பளம் குறித்தும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.