இலங்கையின் இரண்டாவது கொரோனா அலையின் தோற்றம் கண்டுபிடிப்பு - பிரண்டிக்ஸ் இல்லை!!

இலங்கையின் இரண்டாவது கொரோனா அலையின் தோற்றம் கண்டுபிடிப்பு - பிரண்டிக்ஸ் இல்லை!!


இலங்கையில் கொரோனா இரண்டாவது அலையினை பரப்பிய பிராண்டிக்ஸ் கொத்தணி தோற்றம் துருக்கியிலிருந்து இலங்கைக்குவந்த உக்ரேனிய விமானக் குழுவினரால் உருவாக்கப்பட்டது என்று புலனாய்வு தகவல் வெளியிட்டுள்ளது. உளவுத்துறை அறிக்கைபாதுகாப்பு கவுன்சில் உட்பட ஜனாதிபதி கோட்டபய ராஜபக்‌ஷவுக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


$ads={2}

உக்ரேனிய குழுவினர் செப்டம்பர் 11 அன்று இலங்கைக்கு வந்தனர். குழுவில் பதினொரு பேர் இருந்தனர், அவர்கள் சீதுவையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் சுய தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் அதன் விமான ஊழியர்கள் தனிமைபடுத்தப்பட்ட வேலையில் ஹோட்டல் ஊழியர்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

விமானக் குழுவினரில் தனிமைப்படுத்தப்பட்ட உக்ரேனிய நாட்டைச் சேர்ந்தவர் நபர் செப்டம்பர் 13 ஆம் திகதி கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது, மற்றும் ஐ.டி.எச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பிற விமானக் குழுவினருக்கு பி.சி.ஆர் செய்யப்பட்டது.

அறுபது ஹோட்டல் ஊழியர்களில் பதினெட்டு பேர் ஒவ்வொரு நாளும் வேலைக்குச் சென்று தமது வீடுகளுக்கு திரும்புபவர்கள் ஆகும். 18 பேர் செப்டம்பர் 11 முதல் செப்டம்பர் 13 வரை வீட்டிலிருந்து வேலைக்கு சமூகம் அளித்துள்ளனர். ஹோட்டல் ஊழியர்களும் பதினான்கு நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டியிருந்தது, ஆனால் ஹோட்டல் நிர்வாகம் கொரோனா விதிகளை மீறி ஒரு குழு ஊழியர்களை வீட்டிற்கு செல்ல அனுமதித்தது.


$ads={2}

தினமும் வீடுகளுக்கு வருபவர்களில் ஐந்து பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் மூன்று பேர் செப்டம்பர் 11 முதல் செப்டம்பர் 13 வரை பணிபுரிந்தும் உள்ளனர். ஹோட்டல் சமையல்காரர் மற்றும் சலவை அதிகாரி ஆகியோரும் குழுவில் உள்ளனர்.

"இந்த குழுவுக்கு வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்த போது, இலங்கையில் இதுவரை கண்டறிந்திருந்த கொரோனா வைரசின் செறிவை விட இம்முறை இருமடங்காக காணப்பட்டதாக தெரிய வந்த்தது. மக்கள் உடலில் கொரோனா வைரஸ் சுமார் 15 முதல் 18 நாட்கள் இருந்ததாகவும், ஆனால் தற்போது கொரோனா வைரஸ் 29 முதல் 31 நாட்கள் வரை உடலில் தங்குவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.”

இது ஒரு புதிய நிலைமை, பிராண்டிக்ஸ் கொத்தணியில் கண்டறியப்பட்ட முதல் நோயாளியிடம் 29 முதல் 31 நாட்கள் வரை வைரஸ் இருந்தது.

விசாரணையின் போது ஹோட்டல் ஊழியர்கள் பிராண்டிக்ஸ் ஊழியர்களுடன் தொடர்பு கொண்டுள்ளதாக உறுதி செய்யப்பட்ட விசாரணைகளை மேற்கொண்ட சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

உக்ரேனிய ஊழியர்களால் வைரஸால் பாதிக்கப்பட்ட ஹோட்டல் ஊழியர் ஒருவர் தினசரி பொது போக்குவரத்தில் சிலாபத்திலிருந்து சீதுவைக்கு வந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.

பிராண்டிக்ஸ் கொத்தணியில் முதல் நோயாளிக்கு செப்டம்பர் 21 அன்று அறிகுறிகள் தென்பட்டுள்ளது. செப்டம்பர் 16 ஆம் திகதிக்குள் அந்தப் பெண் நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அக்டோபர் 5 ஆம் தேதி, பிராண்டிக்ஸ் கொத்தணியின் முதல் தொற்று ஏற்பட்டது.

வைரஸின் இரண்டாவது அலை முன்பை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இரண்டாவது அலையைத் தொடங்கிய பிராண்டிக்ஸ் கொத்தணி, கடந்த மாதம் செப்டம்பர் 22 ஆம் திகதி விசாகப்பட்டினத்திலிருந்து மத்தலை விமான நிலையத்திற்கு வந்த 48 பேர் கொண்ட குழுவினரால் உருவாக்கப்பட்டது என்று ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த குழு விசாகப்பட்டினத்தில் உள்ள பிராண்டிக்ஸ் தொழிற்சாலையில் பணிபுரிந்த இலங்கையர்களாகும், பின்னர்இரண்டாவது அலை பரவுவதால் தெற்கில் உள்ள ஒரு ஹோட்டலில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தமை பின்னர் உறுதிசெய்யப்பட்டது.

Translated from Aruna Newspaper
யாழ் நியூஸ்

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.