கொரோனா அச்சம் - பாராளுமன்றத்திற்கு பூட்டு

கொரோனா அச்சம் - பாராளுமன்றத்திற்கு பூட்டு


பாராளுமன்றம் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினமும் நாளைய தினமும் பாராளுமன்றம் மூடப்படும் என பாராளுமன்ற பிரதிப் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற வளாகம் முழுவதும் தொற்று நீக்கம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


$ads={2}

பாராளுமன்றமத்தின் சுத்திகரிப்பு பணிகள் நாள் தோறும் நடைபெறும் என்ற போதிலும் இந்த இரண்டு நாட்களில் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுத்திகரிப்பு பணியாளர்கள் வீட்டிலேயே தங்கியிருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் கடமையாற்றிய காவல்துறைப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டமை உறுதியாகிருந்தது.

எவ்வாறெனினும், இந்த வாரத்தில் பாராளுமன்ற அமர்வுகள் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post