ரிஷாட் பதியுதீனை கைது செய்யும் நடவடிக்கை அரசியல் பழிவாங்கல் என்பது எனக்கு சிரிப்பாக இருக்கிறது! -ஜனாதிபதி

ரிஷாட் பதியுதீனை கைது செய்யும் நடவடிக்கை அரசியல் பழிவாங்கல் என்பது எனக்கு சிரிப்பாக இருக்கிறது! -ஜனாதிபதி


எம்.பி. ரிஷாட் பதியுதீனைக் கைது செய்யும் நடவடிக்கைக்கும், அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் என்று எதிரணியினர் கூக்குரல் இடுவதைப் பார்க்கும் போது சிரிப்பாக இருக்கின்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


ஆளுந்தரப்பின் முக்கியஸ்தர்களுடன் நேற்று முன்தினம் நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,


ரிஷாட் பதியுதீன் மீது தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டும், அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது. அதையடுத்தே அவரைக் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.


$ads={2}


அதற்கமைய அவரை கைது செய்ய பொலிஸார் விரைந்த போது அவர் ஓடி மறைந்துள்ளார். அவரைத் தேடும் பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்கின்றன.


ரிஷாட் பதியுதீனை கைது செய்யும் நடவடிக்கைக்கும், அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் என்று எதிரணியினர் கூக்குரல் இடுவதைப் பார்க்கும் போது சிரிப்பாக இருக்கின்றது.


ரிஷாட் விவகாரம் நீதித்துறை சம்பந்தப்பட்டது. இதில் எவரும் தலையிட முடியாது. ரிஷாட் குற்றவாளியா? இல்லையா? என்பதை நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும். அது தொடர்பில் நாம் தீர்மானிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post