கொரோனா பீதி - ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் இடைநிறுத்தம்!

கொரோனா பீதி - ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் இடைநிறுத்தம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கொரோனா பரவலை தடுப்பதற்காக நாட்டின் பல பாகங்களிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்ட நிலையில் ஆணைக்குழு மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளது.


$ads={2}


இதேவேளை, நாடாளாவிய ரீதியில் இதுவரை 68 பொலிஸ் பிரிவுகளில் ஊடங்கு சட்டம் அமுலில் உள்ளது. இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் அளுத்கம, பயாகல மற்றும் பேருவளை பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்ந்து அமுலில் உள்ளது.

அத்துடன், கொழும்பு நகரின் 18 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு நகரில் கோட்டை, புறக்கோட்டை, பொரளை மற்றும் வெலிக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கொத்தட்டுவை மற்றும் முல்லேரியா ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருதானை மற்றும் தெமட்டகொட ஆகிய பகுதிகளுக்கும் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கொட்டாஞ்சேனை, முகாத்துவாரம், மட்டக்குளி, கிரேண்ட்பாஸ், வெல்லம்பிட்டி மற்றும் புளூமெண்டல் ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு ஏற்கனவே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், வடமேல் மாகாணத்தின் குளியாப்பிட்டிய, நாராம்மல, தும்மலசூரிய, பன்னல மற்றும் கிரியுல்ல ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கம்பஹா மாவட்டத்தில் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் , மறு அறிவித்தல் வரை குறித்த பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மொறட்டுவை, பாணந்துறை வடக்கு, பாணந்துறை தெற்கு மற்றும் ஹோமாகமை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இரவு முதல் உடன் அமுலாகும் வகையில் இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post