ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசங்களில் வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு!

ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசங்களில் வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு!


நாட்டில் கொரோனா தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுததப்பட்டுள்ள அனைத்து பிரதேசங்களில் உள்ள நீதிமன்றங்களில் நடக்கும் வழக்கு விசாரணைகளை ஒத்திவைத்துள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படும் தினங்கள் குறித்து பின்னர் அறிவிப்பதாக உயர் நீதிமன்ற பதிவாளர் பிரதீப் மஹாமுத்துகல வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் கம்பஹா, கொழும்பு மாவட்டங்களில் நோய் பரவும் ஆபத்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசங்களில் தனிமைப்படுத்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

 $ads={2}

கொழும்பு புறக்கோட்டை, கோட்டை, பொரள்ளை, வெலிகடை பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பேருவளை, அளுத்கமை, பயாகல பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊடரங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ளது. கம்பஹா மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post