வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவருக்கு கொரோனா உறுதி; பலர் தனிமைப்படுத்ததில்!

வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவருக்கு கொரோனா உறுதி; பலர் தனிமைப்படுத்ததில்!


பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் குளியாப்பிட்டிய வைத்தியசாலையின் 13 மருத்துவர்கள் உள்ளிட்ட 53 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


கடந்த 12ஆம் திகதி இருதய நோய் நிலைமை காரணமாக வைத்தியசாலையில் குறித்த பெண் அனுமதி ஆகியுள்ள நிலையில் கடந்த 15ஆம் திகதி PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.


இதன்போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.


$ads={2}


அவர் பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் கலந்து கொண்டுள்ள நிலையில் அங்கிருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட காரணத்தினால் இவர் மீது PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.


இதன் காரணமாக வைத்தியசாலையில் இரண்டு வார்டுகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post