சீனாவில் இருந்து வீசும் மஞ்சள் நிற தூசிக்காற்று; பீதியில் வட கொரியா!!

சீனாவில் இருந்து வீசும் மஞ்சள் நிற தூசிக்காற்று; பீதியில் வட கொரியா!!


சீனாவிலிருந்து வீசும் மஞ்சள் தூசிக்காற்று கொரோனா வைரஸை கொண்டு வரக்கூடும் என்ற அச்சத்தில் வட கொரியா தனது குடிமக்களை வீட்டுக்குள் இருக்குமாறு எச்சரித்துள்ளது.


அரச கட்டுப்பாட்டில் உள்ள கொரிய மத்திய தொலைக்காட்சி சிறப்பு வானிலைச் செய்திகளை ஒளிப் பரப்பியது, இதன்போது மஞ்சள் தூசி வருவதை எச்சரித்துள்ளது.


இதேவேளை வெளிப்புற கட்டுமான பணிகளுக்கும் நாடு தழுவிய ரீதியில் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து தலைநகர் பியோங்யாங்கின் வீதிகள் கடந்த நாட்களில் காலியாக இருந்தது.


$ads={2}


வட கொரிய அரசு நாட்டில் கொரோனா வைரஸ் இல்லை என்று கூறுகிறது, ஆனால் ஜனவரி முதல் கடுமையான எல்லை மூடல்கள் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்பட்டுள்ளன.


பருவகால தூசி மேகங்களுக்கும் கொரோனாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இருப்பினும், குடிமக்களிடம் முககவசம் அணியுமாறும், வீதிகளில் நடமாட வேண்டாம் என்றும் வடகொரிய அரசு வலியுறுத்தியுள்ளது.


மஞ்சள் தூசி என்பது மங்கோலிய மற்றும் சீன பாலைவனங்களிலிருந்து வரும் மணல்காற்றை குறிக்கிறது; அவை ஆண்டின் சில நேரங்களில் வடக்கு மற்றும் தென் கொரியாவில் வீசுகின்றன; இது நச்சு தூசியுடன் ஒன்றிணைந்துள்ளது, பல ஆண்டுகளாக இரு நாடுகளிலும் சுகாதார அச்சுறுத்தல்களை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.