மக்களுக்கு வழங்கும் நிவாரணத் தொகையை அரசு 10 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும்! -சரத் பொன்சேகா

மக்களுக்கு வழங்கும் நிவாரணத் தொகையை அரசு 10 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும்! -சரத் பொன்சேகா


தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் நிவாரணத் தொகையை 10 ஆயிரம் ரூபாவாக அதிகரித்து வழங்க வேண்டும் என சரத் பொன்சேகா தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் நேற்று (23) இடம்பெற்ற கொரோனா சுகாதார நெருக்கடி தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


"கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில் அதனை அரசாங்கம் சாதாரணமாக மதிப்பிடக்கூடாது.


நாம் அதனை வைத்து அரசியல் செய்யவோ அரசாங்கத்துக்கு சேறு பூசவோ முற்படவில்லை, மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலேயே நாம் கருத்தாக செயற்படுகின்றோம்.


$ads={2}


அத்துடன் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் வழங்கும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் எந்தவிதத்திலும் போதாது. தற்போதுள்ள வாழ்க்கைச் செலவுக்கமைய அதனை 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.


மேலும், "அரசாங்கம் கொரோனா தொற்று தொடர்பில் மக்களுக்கு எதையும் மறைக்கக் கூடாது. உண்மையான தரவுகளை தெரிவிக்க வேண்டும்; மக்களுக்கு சரியான தகவல்களை வழங்கினால் மட்டுமே மக்கள் தமது பங்களிப்பை வழங்குவதற்கு உதவியாக அமையும் என்பதை அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும்." என்றார்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post