4 கோடி கொரோனா தொற்றாளர்கள் - தொடர்ந்தும் அமெரிக்கா முதலிடத்தில்!

4 கோடி கொரோனா தொற்றாளர்கள் - தொடர்ந்தும் அமெரிக்கா முதலிடத்தில்!


உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியைக் கடந்தது.

இதுகுறித்து வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது,


$ads={2}

கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 1.16 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன், அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 40,287,374 யாக உயா்ந்துள்ளது.

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 8,387,799 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் 7,550,273 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சற்று முன்னர் வரை உலகம் முழுவதும் 1,118,326 போ் கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளமையும் குறிப்பிடதக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post