சீன நிறுவனத்தின் முல்லேரியாவ ஆய்வகத்தில் 30,000 PCR கருவிகள் காலாவதி; NTUF அரசிடம் கேள்வி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சீன நிறுவனத்தின் முல்லேரியாவ ஆய்வகத்தில் 30,000 PCR கருவிகள் காலாவதி; NTUF அரசிடம் கேள்வி!


முல்லேரியாவ மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்திற்காக கொள்வனவு செய்யப்பட்டு, பயன்படுத்தாததால் காலாவதியாகியுள்ள 30,000 PCR ஆன்டிபாடி கருவிகளைப் பற்றி ஆராயுமாறு தேசிய தொழிற்சங்க முன்னணி (NTUF) அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த ஆய்வகம் சீன நிறுவனத்தால் இவ்வாண்டு சுமார் 250 மில்லியன் ரூபா செலவில் நிறுவப்பட்டுள்ளது.

"பாரிய செலவில் அமைக்கப்பட்ட முல்லேரியாவ ஆய்வகம், வெளிநாட்டு நிதியளிக்கப்பட்ட திட்டங்களின் மேலுமொரு கழிவு என்று ஆக்கிவிடாமல் இது தொடர்பாக உடனடி விசாரணையைத் தொடங்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளரையும் ஜனாதிபதியையும் கேட்டுக்கொள்கிறோம்."

$ads={2}

"முல்லேரியாவ ஆய்வகத்திற்கு அச்சமயம்  PCR கருவிகளின் தேவை இல்லை என்றால், இவை வீணாவதைக் குறைக்க காலாவதி திகதிக்கு முன்னர் மற்ற ஆய்வகங்களுக்கு விநியோகம் செய்திருக்கலாம்." என NTUF அமைப்பின் கன்வீனர் ரவி குமுதேஷ் விளக்கினார்.

மேலும் சுகாதார அமைச்சின் நேர்மறையான பதில் இல்லாதது துரதிர்ஷ்டவசமானது என்று தொழிற்சங்கம் வலியுறுத்தியது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.