மினுவன்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியிலிருந்து 23 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள்!

மினுவன்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியிலிருந்து 23 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள்!


மினுவன்கொடை மற்றும் பெலியகொடை மீன் சந்தைக் கொத்தணியில் இருந்து இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ்தொற்றாளர்களின் எண்ணிக்கை 5000 ஐத் தாண்டியுள்ளது.


$ads={2}

கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக கொரோனாதடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் (NOCPC) தெரிவித்துள்ளது.

23 மாவட்டங்களில் இருந்து மொத்தம் 5097 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர், 634 தொற்றாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டமையங்களில் இருந்து பதிவாகியுள்ளனர்.

மினுவன்கொடை மற்றும் பெலியகொடை கொத்தணியுடன் இணைக்கப்பட்ட தொற்றாளர்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுமாவட்டங்களில் மாத்திரம் எந்தவொரு தொற்றாளரும் பதிவாகவில்லை என கொரோனா தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம்(NOCPC) தெரிவித்துள்ளது.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post