மேலும் இரு உட்பிரிவுகளை 20இல் இருந்து நீக்க தீர்மானம்!

மேலும் இரு உட்பிரிவுகளை 20இல் இருந்து நீக்க தீர்மானம்!


சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக நிறைவேற்ற வேண்டும் என உயர் நீதிமன்றத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள 20ஆம் சட்டமூலத்தின் 5 மற்றும் 22 ஆம் உட்பிரிவுகளை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.


இன்று (20) பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


அரசியலமைப்பின் 20ஆம் திருத்தச்சட்ட மூலத்தின் சில சரத்துக்களை நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமாயின் 3 இல் 2 பெரும்பான்மைக்கு மேலதிகமாக பொதுசன வாக்கெடுப்பு அவசியம் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.


$ads={2}


20 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை இன்று நாடாளுமன்றில் அறிவித்த போதே சபாநாயகர் இதனைக் குறிப்பட்டுள்ளார்.


இதற்கமைய சட்டமூலத்தின் 14 மற்றும் 22 ஆவது சரத்துக்களை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post