நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்!

நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்!

விஜய் சேதுபதியின்  மகளுக்கு ட்விட்டர் பக்கத்தில் பாலியல் மிரட்டல் விடுத்ததற்காக பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதியை  நடிக்கபில் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையை மையப்படுத்திய 800 படத்தை உருவாக்க திட்டமிட்டனர். ஆனால் விஜய் சேதுபதி படத்திலிருந்து விலக வேண்டும் என அரசியல் தலைவர்களும் ,சினிமா பிரபலங்களும் என பலர் வலியுறுத்தி வந்தனர். எதிர்ப்பு அதிகரித்ததால் படத்திலிருந்து விலகுவதாக நடிகர் விஜய் சேதுபதி நேற்று அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு நெட்டிசன் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பாலியல் மிரட்டல் விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளார். கருத்து வேறுபாட்டை தெரிவிக்கும் ஒரு தமிழ் மகன் அதான சமுதாயத்தில் இருக்கும் பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவா நிக்கிறாங்க இந்த ஊருல’ இதனை மாற்ற யாருமே இல்லையா பொது வெளியில் குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுப்பவரும்  குற்றவாளிதான் என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post