சுமார் 13 மணித்தியாலங்கள் சாட்சியம் வழங்கிய சஹ்ரானின் மனைவி!

சுமார் 13 மணித்தியாலங்கள் சாட்சியம் வழங்கிய சஹ்ரானின் மனைவி!


ஈஸ்டர் தாக்குதலை நடத்திய தீவிரவாதி சஹ்ரான் ஹசீமின் மனைவி நேற்று 13 மணித்தியாலங்களாக ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கியுள்ளார்.


அவர் நேற்று (23) காலை 10 மணியளவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கினார்.


சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய அவர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார்.


$ads={2}


இவ்வாறு இருக்கையில் தடுத்து வைக்கப்பட்ட காலம் நிறைவடைந்ததை அடுத்து கடந்த 22ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். பின்னர் அவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.


பின்னர் அவரை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அவர் நேற்று சிறைச்சாலை அதிகாரிகளால் ஆணைக்குழுவில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.


இதற்கமைய அவர் சாட்சி வழங்கியதுடன், அது தொடர்பில் செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.


இதற்கமைய 13 மணித்தியாலங்கள் சாட்சியம் வழங்கிய பாதிமா ஹதீயா பின்னர் சிறைச்சாலை அதிகாரிகளால் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post