இரத்தினபுரி பகுதியில் தாய் மற்றும் 11 மாத குழந்தைக்கு தொற்று உறுதி!

இரத்தினபுரி பகுதியில் தாய் மற்றும் 11 மாத குழந்தைக்கு தொற்று உறுதி!


இரத்தினபுரி - எஹலியகொட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகார பிரதேசத்தில் இன்றைய தினத்தில் மாத்திரம் 08 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


அவர்கள் அனைவரும் பேலியகொட மற்றும் கொழும்பு துறைமுக கப்பற்துறை கொத்தணிகளுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.


இவ்வாறு பதிவான தொற்றாளர்களில் எஹலியகொட நகரில் மீன் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் ஒருவரும் மற்றும் வடக்கு கரதான பிரதேசத்தை சேர்ந்தவர்கள் இருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.


$ads={2}


இவர்களுக்கு இடையில் இதற்கு முன்னர் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மீன் வியாபாரியின் மனைவி அவர்களின் 11 மாத குழந்தையும் மற்றும் சிறிசமன்புர பிரதேசத்தை சேர்ந்த அவரின் சகோதரரும் அடங்குகின்றனர்.


இவர்களுடன் நெருங்கிப் பழகிய சுமார் 200 பேர் அவர்களில் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post